ஒரு கதா காலட்சேபம் கேட்போமா?
திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க..
.. .. ..
ஆக, கீர்த்தனை ஆரம்பத்திலே..
....
வணங்காமுடி, வணங்காமுடின்னு
வரலாறு வாத்தியாரு இருந்தாரு
சிஷ்யன்: ரெண்டு பேரா குருவே?
ஒருத்தர் தான்.. ஆனா, அவருக்கு ரெண்டு
குணாதிசயம் உண்டு. அதை அப்புறமா சொல்றேன்.
அந்த வணங்காமுடி எப்பேர்ப்பட்ட வாத்தியார்ன்னா, அரிஸ்டாட்டில், ப்ளேட்டோ, அலெக்ஸான்டர் முதல்
எல்லாரைப்பத்தியுமான மேலை நாட்டு வரலாறு முதல் லேட்டஸ்ட் வரலாற்று ஆய்வுகள்
வரை எல்லாமே அவருக்கு தண்ணி பட்ட பாடு..ஆமாம்.. எல்லாமே அத்துபடி...
சிஷ்யன்: அப்படின்னா எல்லா சப்ஜெக்ட் வரலாறுமே அவருக்கு தெரியுமா குருவே?
என்ன அப்படி கேட்டுட்டே? ஒரு தடவை தன்னோட சப்ஜெக்ட்டை மட்டமா
பேசின ஒரு வேதியியல் வாத்தியார் கிட்ட வணங்காமுடி,
ஆபரேஷன் புளூ பீகாக்ன்னா (Operation
Blue Peacock) என்னன்னு தெரியுமான்னு கேட்க, வேதியியல் வாத்தியார்
திரு திருன்னு மரியாதையாய் முழிக்க, நம்மாளு
விளக்கம் சொன்னாரு.
1950கள்ல யூரோப்புக்கும், ரஷ்யாவுக்கும் யாரு பெரிய ஆளுன்னு
பனிப்போர் நடந்துச்சு ... ரஷ்யாவோட ரெட் ஆர்மி ஜெர்மன் வழியா யூரோப்புக்குள்
நுழைய வாய்ப்பு இருந்ததால, அவங்க வர்ற வழியை எப்படியோ மோப்பம் பிடிச்சு யாரோ ஒரு ஆர்மி சீஃப் கொடுத்த
ஐடியா படி, அந்த பனிபடர்ந்த எல்லை பகுதியில நியூக்ளியர் கன்னி வெடிகளை UK ஆர்மி புதைச்சு
வெச்சுட்டங்களாம்!
டெக்னாலஜி ரொம்ப டெவலப் ஆகாத காலம்ங்கிறதால அதுல ஒரு எலக்ட்ரானிக்
ப்ராப்ளம் வந்துச்சு.. அங்க கொட்டுற பனியில புதைச்சு வெச்ச லாண்ட் மைன் ஒரு வாரம்
கூட தாங்காது, வெடிக்கவும் வெடிக்காது. அதுக்கு ஒரு ஐடியா பண்ணி அந்த land mine caseக்குள்ள ஒரு
உயிருள்ள கோழிய வெச்சு அதுக்கு தீனியும் வெச்சுட்டாங்களாம்..
கோழி உடம்புல இருந்து வர்ற ஹீட் எலக்ட்ரானிக் ப்ராப்ளம் இல்லாம பாம்
வெடிக்க உதவுமாம். பின்னாடி வரலாற்று நிகழ்வுகளை பாக்கும் போது நல்ல
வேலையா ஏதும் அந்த மாதிரி ஏடா கூடமா நடக்கல.
அப்படீன்னு விளக்கம் கொடுத்துட்டு,
சரி! அதுல என்ன கெமிக்கல் இருந்துச்சு? படிச்சுட்டு வந்து
சொல்லுங்கன்னு ஒரு டுவிஸ்ட்டும் வெச்சாரு.
சிஷ்யன்: ஆஹா!! பேஷ்! பேஷ்! ரொம்ப சுவரஸ்யமா இருக்கே. இது மாதிரி வேற ஏதாவது ஒண்ணு
அவுத்து விடுங்களேன் ...
ம்ம் சொல்றேன் கேளுடா அம்பி .. உங்க சப்ஜெக்ட்டுக்கெல்லாம் நோபல் பரிசு கூட
கிடையாது. நீங்கல்லாம் பேச வந்துட்டீங்கன்னு ஒரு நாள் ஒரு உயிரியல் வாத்தியார்
நம்ம வணங்காமுடிய உசுப்பி விட, வந்ததே கோபம்!!
சிஷ்யன்: ஹூம்.. அப்பிடீன்னா நம்ம வணங்காமுடி வாத்தியார் அவர கண்ணா
பின்னான்னு திட்டிட்டாரா குருவே?
அதான் இல்லே.. நம்ம ஆளு தான் புத்திசாலி ஆச்சே! பதிலுக்கு, ஒரு பதில் கேள்வி
கேட்டார்..
என்னய்யா பெரிய நோபல் பரிசு? உங்க துறையில DNA கண்டு பிடிச்சதுக்கு
வாட்சனுக்கும், கிரிக்க்கும் மட்டும் பெரிய கிரெடிட் கொடுத்தாங்கள்ல்ல.. நியாயமா பாத்தா
இதுக்கு காரணமான போட்டோ-51ஐ கண்டுபிடிச்ச ரோஷாலின்ட்க்குத்தான் முதல் கிரெடிட் கொடுத்து
இருக்குனும்?
கேள்வி கேட்டவர் வாயடைச்சு போயிட்டார்.
சிஷ்யன்: அதெல்லாம் சரி குருவே, அவருக்கு இன்னொரு குணாதிசயம்
இருக்குன்னு சொன்னீங்களே..
அப்படி கேள்றா அம்பி! சொல்றேன்..
இப்படியான வரலாற்று திறமை இருக்கிற
நம்ம வாத்தியாருக்கு அவர் பிரச்சனையே நிகழ்காலந்தான்.
சிஷ்யன்: நிகழ்காலமா?
ஆமாம். நிகழ்காலந்தான். அந்த இன்னொரு குணாதிசயம் என்னன்னா, அவருக்கு அப்பப்ப போக வேண்டியது எந்த
கிளாஸ் ரூம்ன்னு கொழம்பிடும் .. பெரிய ஞானிகளுக்கெல்லாம் இந்த மாதிரி நடப்பது
சகஜம்தானே..
பதினோராம் கிளாஸ்ஸுக்கு போறதுக்கு பதிலா ஒன்பதாம் கிளாஸ்ஸுக்கு போய்டுவார்.
ஒன்பதாம் கிளாஸ்ஸுக்கு பதிலா ஆறாங்கிளாஸ் போய்டுவார்.. அடிக்கடி இப்படி
குழம்பிடுவார்..
அதனால சில ஸ்டூடண்ட்ஸ் அவருக்கு VRS ன்னு பட்ட பேர்
வெச்சுட்டாங்க.
சிஷ்யன்: VRSன்னா Voluntary
Retirement Service தானே குருவே?
பசங்க பாஷையில VRSன்னா வணங்காமுடி ராமசாமி
சஞ்சய்.. சஞ்சய் ராமசாமின்னா முழு மறதி.. ராமசாமி சஞ்சய்ன்னா இடமாற்ற மறதி..
சிஷ்யன்: அட பவத்த.. அந்த மறதியால ஏதாவது சம்பவம் நடந்துச்சா குருவே?
ஆமாம்.. அன்னைக்கு பதினோராம்
கிளாஸ்ஸுக்கு பாடம் எடுக்க நம்ம வாத்தியார் போனரு.
டோர் குளோஸ் ஆகி இருந்துச்சு.. ..
சிஷ்யன்: ஓஹோ!
இன்னைக்கும் தப்பான கிளாஸ் ரூமுக்கு வந்துட்டோமான்னு ஜன்னல் வழியா
பார்த்தாரு.. யாரு பாடம் நடத்துறாங்கண்ணு தெரியல..
ஆனா, பசங்கெல்லாம் அமைதியா வகுப்பை கவனிச்சுகிட்டு இருந்ததாங்க..
ஒரு பொண்ணு பவ்யமா எழுந்து ஏதோ பதில் சொன்னா..
ஒரு வேளை பீரியட் பெல் அடிச்சது தெரியாம இன்னும், முன்னாடி போன ஆசிரியர்
பாடம் எடுக்கிறார் போலன்னு நெனச்சு 2 நிமிஷம் காத்து இருந்தார்..
கதவு திறந்த பாடு இல்ல ..
சிஷ்யன்: அப்புறம்?
எதுக்கும் ஸ்டாஃப் ரூம் போய் கரெக்ட்டான கிளாஸ்தானான்னு பாத்து வர போனாரு ..
எல்லாம் கரெக்ட் தான் .
திரும்ப ஓட்டமும் நடையுமா வந்தாரு..
சரி, நேரமாச்சு கதவைத் தட்டி உள்ள நுழைஞ்சிடலாம்ன்னு, கதவை திறந்தாரு..
....
சிஷ்யன்: டைமுக்கு கிளாஸ் முடிக்காத அங்க இருந்த வாத்தியரை கோவமா திட்டி
அனுப்பிச்சாரா குருவே நம்ம வாத்தியரு?
அதான் இல்ல.. கிளாஸ் ரூம்ல வாத்தியார் யாரும் இல்ல..
ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து கோரஸா APRIL FOOL ன்னு சொன்னாங்க..
நம்ம வணங்காமுடிக்கே சிரிப்பு வந்து அன்னிக்கு கிளாஸ்ல தெனாலி ராமன் ஜோக்ஸ்
மட்டுமே பாடமா எடுத்தாரு..
இப்படியாக .. வரலாறா வாழ்ந்த வணங்காமுடி வாத்தியாருக்கு அன்னைக்கு நடந்தததை, வரலாறா இன்னமும் அவரோட
ஸ்டூடண்ட்ஸ் பேசிக்கிறாங்க..
மங்களம் ! மங்களம்!
சுபமங்களம்!
--------------------------------------------------------------------------- முற்றும்--------------------------------------------------
Super pa ❤
பதிலளிநீக்குThanks Sekar
நீக்கு